அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க தூதர்
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்'குடன், இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கான, இலங்கையின் ஏற்றுமதியில் விதிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரிகள் குறித்து, அவர் தூதருடன் கலந்துரையாடியுள்ளார்.
இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், தமது X பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
வேலைவாய்ப்பு
அதில், சந்திப்பின் போது, அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக உறவை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தியதாக கூறியுள்ளார்.
Had a productive discussion with Foreign Minister Vijitha Herath @HMVijithaHerath on rebalancing Sri Lanka’s trading relationship with the U.S. I emphasized the importance of reciprocal treatment for U.S. exports. A fair, balanced trade relationship supports economic growth,… pic.twitter.com/D4oI09uKB9
— Ambassador Julie Chung (@USAmbSL) April 7, 2025
அத்துடன், நியாயமான, சமநிலையான வர்த்தக உறவு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று சங் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |