இலங்கையில் வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Video)
நாட்டில் கோவிட் பரவலை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அனைத்துத் துறைகளிலும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
அதன்படி பார்க்கும் போது நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகளில் பாரிய மாற்றம் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் வாகனம் பழுது பார்க்கும் நிலையங்களை சேர்ந்தவர்கள் கூறுகையில், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வாகனங்களின் உதிரிப்பாகங்களில் பழுது ஏற்படும் நிலை அதிகமாக உள்ளது.
அத்துடன் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் கூட தற்போது அதிகரித்துள்ள போதும், உதிரிப் பாகங்களின் தரத்தை பார்க்கும் போது குறைவாகவே காணப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே வாகன உரிமையாளர்கள் பெரும்பாலும் பழுதாகும் உதிரிப்பாகங்களை சரிசெய்து பாவனைக்கு உட்படுத்தவும், பழைய அல்லது நல்ல நிலையில் உள்ள பாவனை செய்த உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதிலேயே அதிகளவில் நாட்டம் கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக சந்தையில் போலியான மற்றும் தரம் மிகவும் குறைந்த உதிரிப்பாகங்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும் சாத்தியம் காணப்படுவதால் இது தொடர்பில் வாகன உரிமையாளர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
