விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு முன்வர வேண்டும்! தவிசாளர் அவசர கோரிக்கை

Sri Lankan Peoples Sri Lanka Government Weather Rain
By Farook Sihan Feb 23, 2026 11:41 AM GMT
Farook Sihan

Farook Sihan

in சமூகம்
Report

இயற்கைச் சீற்றங்கள் மற்றும் காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உடனடியாக நட்டஈடு வழங்க முன்வர வேண்டும் என நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுர அரசை சாடிய நாமல் - தப்பியோடினாலும் தண்டனை நிச்சயம்! வசந்த சமரசிங்க பதிலடி

அநுர அரசை சாடிய நாமல் - தப்பியோடினாலும் தண்டனை நிச்சயம்! வசந்த சமரசிங்க பதிலடி

இயற்கை தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயம்

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மழையினால் முளைக்கும் நெல்மணிகள் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும்விவசாயத்துறை இன்று பெரும் சிதைவைச் சந்தித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கின.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு முன்வர வேண்டும்! தவிசாளர் அவசர கோரிக்கை | Urgent Request From The Chairman

பெரும் சிரமத்திற்கு மத்தியில் அறுவடை செய்யப்பட்டு, உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள், கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் 'டிட்வா' புயல் மற்றும் பருவப் பெயர்ச்சி மழையினால் தற்போது முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையிலும் மன உளைச்சலிலும் உள்ளனர்.

தனியார் ஆலைகளின் விலைச்சுரண்டல்

மறுபுறம், நெல் கொள்வனவில் தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளைத் திட்டமிட்டுச் சுரண்டி வருகின்றனர்.

"தற்போது நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, மூன்று மூடை நெல்லை வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மாத்திரமே தனியார் ஆலைகள் கொள்வனவு செய்கின்றன.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு முன்வர வேண்டும்! தவிசாளர் அவசர கோரிக்கை | Urgent Request From The Chairman

இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்" என தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நஷ்டம் காரணமாக, அடுத்த சிறுபோகச் செய்கைக்குத் தேவையான மூலதனம் இல்லாமலும், விதை நெல்லைக் கொள்வனவு செய்ய முடியாமலும் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என தவிசாளர் வலியுறுத்தியுள்ளார்.

1. ஈர நெல் கொள்வனவு: உலர்ந்த நெல்லைப் போன்றே, மழையினால் பாதிக்கப்பட்ட ஈர நெல்லையும் அரசாங்கம் நியாயமான விலையில் கொள்வனவு செய்ய வேண்டும்.

2. நேரடி நட்டஈடு: காட்டு யானைத் தாக்குதல்கள் மற்றும் வெள்ளத்தினால் பயிர்ச் சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய நட்டஈடு விரைவாக வழங்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு முன்வர வேண்டும்! தவிசாளர் அவசர கோரிக்கை | Urgent Request From The Chairman

3. நிரந்தரத் தீர்வு: ஒவ்வொரு பிரதேசத்தின் சூழலுக்கு ஏற்ப, விவசாயப் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையிலான நிரந்தரத் திட்டங்களை ஜனாதிபதியும் விவசாய அமைச்சும் இணைந்து வகுக்க வேண்டும்.

நாட்டின் உணவு உற்பத்திக்கு முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

அர்ச்சுனா எம்பியின் காணிகளால் அச்சத்தின் மத்தியில் மக்கள்

அர்ச்சுனா எம்பியின் காணிகளால் அச்சத்தின் மத்தியில் மக்கள்

லண்டன் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட நாமல்

லண்டன் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட நாமல்


3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US