கல்விச் சீர்திருத்தச் சிக்கலை தீர்க்கும் நடவடிக்கை துரிதம்! அமைச்சர் நளிந்த தெரிவிப்பு
புதிய கல்விச் சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்கும் நடவடிக்கைள் துரிதப்படுத்துள்ளன என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "கல்வி சீர்திருத்தங்கள் நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த எமது அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தரம் 6 பாடநூலில் ஏற்பட்ட ஒரு சிறு தவறால் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கைகள்
எனினும் அந்த தவறுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போன்று வேறு எந்தவொரு தவறான விடயங்களும் பாடநூலில் உள்ளடக்கப்படவில்லை.

அதை நன்கு அறிந்த தரப்பினரால் இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியிடம் கடிதம் மூலமும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தவறுகள் காணப்படுமாயின் அவற்றை திருத்திக் கொண்டு கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நாம் தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri