ராஜபக்ச அரசியலில் இனவாதம் இல்லை!:நாமலின் பரபரப்பான அறிவிப்பு
ராஜபக்ச அரசியலில் அல்லது பொதுஜன பெறமுன கட்சியில் இனவாதம் இல்லை என நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (20.01.2026) ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்,
நாங்கள் உண்மையான பிரச்சினைகளுக்காக முன்னிலை கொடுத்து செயற்பட்டோம்.அந்த பிரச்சினை யாருக்கு என்று தேர்ந்தெடுக்காமல் மும்மதத்தினர் சார்பாகவும் செயற்பட்டோம்.
வடக்கில் நாம் ஏற்படுத்திய மாற்றம்
வடக்கில் யுத்தம் நடக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கொண்டு செல்லப்பட்ட மடுமாதாவின் உருச்சிலையை மீட்டு மீண்டும் மடுமாதாவின் திருவிழா நடைபெற வழிசமைத்துக் கொடுத்தோம்.
மேலும் முல்லைத்தீவு காளி கோயிலுக்கு அனைவரும் செல்லக் கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுத்தோம்.ஆனால் இன்று அரசிலுக்காக எதிர் தரப்பினரை குற்றம்சாட்டி உண்மையான பிரச்சினையை மூடி மறைக்கின்றனர்.

திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்ததாக சில தேரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.ஆனால் அன்று மீண்டும் பொலிஸாரே புத்தர் சிலையை மீண்டும் கொண்டு வந்து வைத்தனர்.
அப்படியென்றால் பொலிஸாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்.பௌத்த பிக்குகளுக்கு ஒரு நீதியும் பொலிஸாருக்கு மாறுப்பட்ட நியாயத்தையே அரசாங்கம் பின்பற்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri