திருகோணமலையில் 34 கோயில்கள் சட்டவிரோதமானது:சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர
திருகோணமலையில் 34 கோயில்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது.அவற்றை அகற்றுமாறு நீதிமன்றத்தால் மாநகர சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று (20.01.2026) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் திருகோணமலை புத்தர் சிலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தேரர்களின் வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்து பேசியதாவது,
சட்டவிரோத கோயில்கள
இப்போதும் எட்டு கோயில்கள் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சட்டத்திட்டங்களை மீறி அமைக்கப்பட்டுள்ளன.இவற்றுக்கு கடலலைகளும் அடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் நாங்கள் இது தொடர்பில் கதைக்கவில்லை.பௌத்தர்களாக நாங்கள் ஒன்றுமையாகத் தான் இருந்தோம்.ஆனால் இவ்வாறு தேரர்களை கைது செய்து பௌத்த மதத்திற்கு தீங்கிழைத்து பேச வைக்கின்றனர்.

காலையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை வணங்குவதற்கு இரவு வந்த பௌத்த பிக்குகளை கடலோர பாதுகாப்பு திணைக்கள சட்டத்திட்டங்களை மீறியதாக கைது செய்தது யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத காரணமாகும்.
இது திட்டமிட்டப்பட்ட செயற்பாடாகும் என குறிப்பிட்டுள்ளார்.