வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு விசேட அறிவிப்பு
தென் கொரியாவில் வேலைவாய்ப்புப் பெறுவதற்காகத் தகுதி பெற்று, வேலை ஒப்பந்தத்தை எதிர்பார்த்து இணையத்தளத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பணியாளர்கள், இரண்டாவது மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய மனிதவள மேம்பாட்டு நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு வழங்கியுள்ளது.
விசேட அறிவிப்பு
இந்த புதிய தீர்மானம் 2026 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொழித் தேர்ச்சிப் பரீட்சை உள்ளிட்ட ஏனைய அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்யும் பணியாளர்கள், இணையத்தளத்தில் உள்வாங்கப்படுவதற்கு முன்னர் முதன் முறையாக மருத்துவப் பரிசோதனைக்குத் தோற்ற வேண்டும்.

அந்தப் பரிசோதனையில் சித்தியடையும் பணியாளர்களின் விபரங்கள் இணையத்தளத்தில் உள்ளிடப்படும்.
அந்த இணையத்தளத்தில் விபரங்கள் உள்ளிடப்பட்டு முதலாம் ஆண்டின் இறுதியில் வேலை ஒப்பந்தம் கிடைக்காது தொடர்ந்து காத்திருக்கும் பணியாளர்கள், இதுவரை இரண்டாவது முறையும் மருத்துவப் பரிசோதனைக்குத் தோற்ற வேண்டியிருந்தது.
எனினும், புதிய தீர்மானத்தின்படி, இரண்டாம் ஆண்டிற்காக அவ்வாறான மருத்துவப் பரிசோதனைக்குத் தோற்ற வேண்டிய அவசியமில்லை என்பதுடன், முதன்முறை செய்த மருத்துவப் பரிசோதனை மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிர்வாகத் வினைத்திறனை அதிகரிப்பதும், மருத்துவப் பரிசோதனைகளுக்காக வேலை தேடுபவர்கள் செலவிடும் பணத்தைக் குறைப்பதும் இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan