கிளிநொச்சியில் யூரியா விநியோகம்: மகிழ்ச்சியில் விவசாயிகள்(Photos)
கிளிநொச்சியில் சிறுபோக செய்கைக்கான உரம் அனைத்து கமநல சேவை நிலையத்தின் ஊடாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - புளியம்பொக்கணை கமநல சேவை திணைக்களத்தின் ஊடாக நேற்று(30) பிரமந்தனாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக பயிர் செய்கைக்கான யூரியாவே இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளது.
யூரியா விநியோகம்
நீண்ட நாட்களுக்கு பின் தமக்கு யூரியா உரம் கிடைக்க பெற்றதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அத்துடன், ஒரு மூட்டை யூரியாவின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கு கமநல சேவை திணைக்களத்தினூடாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
சிறுபோக செய்கைக்கு கிடைத்த உதவி: மகிழ்ச்சியில் விவசாயிகள் |