சிறுபோக செய்கைக்கு கிடைத்த உதவி: மகிழ்ச்சியில் விவசாயிகள்
கிளிநொச்சியில் சிறுபோக செய்கைக்கு தேவையான யூரியா உரம் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
யூரியா உரத்தினை பெற்றுத்தருமாறு ஆணையாளர் நாயகத்திடம் மாவட்ட அரச அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யூரியா உரத்தினை உடனடியாக வழங்குமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகதத்தினால் தேசிய உர கூட்டுத்தாபனத்திற்கு கடந்த 22ம் திகதி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
யூரியா உரம் விநியோகம்
சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள விவசாயிகளுக்கு தேவையான 222.65 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை பெற்றுத்தருமாறே கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திடம் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கமைவாக உரத்தினை அனுப்பி வைக்குமாறு இலங்கை உர கூட்டுத்தாபனத்திற்கு ஆணையாளர் நாயகத்தினால் கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி, உர கூட்டுத்தாபனத்தினூடக கிளிநொச்சிக்கு தேவையான 222.65 மெட்ரிக் தொன் உரம் கமநல சேவை நிலையங்களினுாடாக விநியோகிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தீர்வு
விவசாயிகளுக்கு தேவையான உரத்தினை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்த மாவட்ட அரச அதிபர் மற்றும் கமநல சேவை திணைக்களத்தின் ஆணையாளர் ஆகியோருக்கு விவசாயிகள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் சீரான முறையில் எரிவாயு விநியோகம் |