வன்னி பிராந்திய மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்(Photo)
வன்னி பிராந்தியத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் ஒன்று கூடி மாவட்ட ரீதியாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று (26) மாலை வவுனியா அமைதியம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள்
இந்த கலந்துரையாடலில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக இடம்பெறும் காணி அபகரிப்பு,காற்றாலை மின் செயற்திட்டம், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் பெளத்த மயமாக்கல் செயற்பாடுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆவணங்கள் தயார்படுத்தல்
அதேவேளை குறித்த ஒன்றுகூடலில் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்று கொள்வதற்கான ஆவணங்கள் தயார்படுத்தல் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான தெளிவுபடுத்தலும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள், மெசிடோ நிறுவன
அதிகாரிகள் மற்றும் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்ர நேஷனல் வடமாகாண இணைப்பாளர் உட்பட பலர்
கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
