நாடளாவிய ரீதியில் சீரான முறையில் எரிவாயு விநியோகம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிவாயு விநியோக நடவடிக்கைகளையும் சீராக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது நாட்டில் சில பகுதிகளில் எரிவாயு விநியோகம் சீராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் சிறப்பான முறையில் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக நேற்று(27) எரிவாயு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் மூலம் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட முனைச் சேனை மைதானத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு அந்த பிரதேச மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இவ் விநியோக நடவடிக்கை நேற்று(27) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக எரிவாயுவினை பெறுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனை கருத்திற் கொண்டு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனியின் மேற்பார்வையில் சுமார் 2000 சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது. கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் எரிவாயு விநியோக நடவடிக்கை மிக நீண்ட நாட்களின் பின் இடம்பெற்றுள்ளது.
மே மாத மின்சார பட்டியலை வைத்து எரிவாயு விநியோகம் சீராக முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயுவை பெற்றுச் சென்றுள்ளனர்.
செய்தி: ஹஸ்பர்