திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலிருந்து உப்புவெளி தவிசாளர் வெளிநடப்பு
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, உப்புவெளி பிரதேச சபைத் தவிசாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (15.10.2026) பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன எழுப்பிய கேள்வியொன்றைத் தொடர்ந்து காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு உரிய அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டிய தவிசாளர், உப்புவெளி பிரதேச சபையின் செயற்பாடுகளைக் குழப்புவதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் கூறுவது என்ன?
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களில் 2,375 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 12,802 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன கூறுவதென்ன?
எங்களுடைய ஆட்சியில், இனவாதத்துக்கு மதவாதத்துக்கும் இடமில்லை, நாங்கள் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை இதோ பாருங்கள். மீண்டும் இனவாதத்தை ஏற்படுத்த வேண்டாம். இந்த மாவட்டத்தில் மூன்று இன இனங்களும் புரிந்துணர்வோடு, தற்போது ஐக்கியமாக வாழ்கிறார்கள்.

எனவே பொய்யான கட்டுக் கதைகளை கூறி, மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். அபிவிருத்தியில் இனவாதமோ பிரதேசவாதமோ இல்லை எனக் குறிப்பிட்ட அவர், தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அபிவிருத்திக்காக ஏராளமான நிதி ஒதுக்கி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன தெரிவித்தார்.

உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri