மலையக மக்கள் அநாதவராக்கப்பட்டுள்ளனர்! எ ம். உதயகுமார் (Video)

Hatton Nuwaraeliya Udayakumar
By Thirumal Feb 20, 2022 04:21 AM GMT
Report

மலையக மக்களின் இதயத்துடிப்பை அறிந்த தலைவர்கள்தான் சஜித் பிரேமதாசவும், பழனி திகாம்பரமும். எனவே, இவர்கள் இருவரும் இருக்கும் ஆட்சியில்தான் நிச்சயம் மாற்றம் வரும். எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராக வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியாக மட்டும் அல்ல, சமூக ரீதியாகவும் நாம் ஒன்றுபடவேண்டும். கடந்த காலங்களில் எமது மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. இதனால்தான் சமூகம் பின்தங்கிய நிலையில் இருந்தது.

எனினும், தலைவர் திகாம்பரம் அமைச்சரான பின்னர் மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார். தனி வீடுகளை அமைத்துக்கொடுத்தார். நூலகங்கள் அமைக்கப்பட்டன. கலாசசார மண்டபங்கள் நிறுவப்பட்டன. காணி உரிமை கிடைத்தது.

எனவே  திகாம்பரம் போன்ற தலைவர்கள் எமக்கு கிடைத்தமை வரமாகும். எனவே, அவர் வழியில் பயணித்து மாற்றத்தை ஏற்படுத்துவோம். மலையக மக்களுக்கு பிரஜா உரிமை கிடைக்கப்பெற்றிருந்தாலும் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் வீட்டுரிமை மற்றும் காணி உரிமையை திகாம்பரமே பெற்றுக்கொடுத்தார்.

ஆட்சிகள் மாறினாலும் மக்களுக்கான சேவைகள் மாறக்கூடாது. ஆனால் இந்த ஆட்சியின்கீழ் மலையக மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை.

திகாம்பரம் கட்டிய வீடுகள் குருவிக்கூடு என்றார்கள். இன்று அதைகூட கட்டுவதில்லை. தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஆளுந்தரப்பால் மீறப்பட்டுள்ளன. மலையக மக்கள் அநாதவராக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்துக்கு கிடைத்த பிரதேச செயலகங்கள்கூட பறிக்கப்பட்டுள்ளன. உப அலுவலகங்களே திறக்கப்படுகின்றன. கிடைத்த உரிமையையும் இழந்துள்ளனர்.

இப்படியான தலைமைத்துவம் வேண்டுமா? எனவே, எமது கஷ்ட நஷ்டங்களை புரித்த தலைவர்தான் எமக்கு வேண்டும். நாட்டு மக்களின் இதயத்துடிப்பை அறிந்தவர்தான் சஜித். மலையக மக்களின் இதயத்துடிப்பை தெரிந்தவர்தான் திகாம்பரம். இப்படியான தலைவர்களே நாட்டை ஆள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US