முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலமைகளை கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் நோயாளர்களுடனும் கலந்துரையாடினார்.
குறித்த விஜயம் நேற்று(14.02.2025) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி உமாசங்கருடன் கலந்துரையாடிய பிரதி அமைச்சர் வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து கொண்டார்.
தற்காலிக தீர்வுகள்
மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் ஆண் , பெண் விடுதி பற்றாக்குறை தொடர்பிலும் நோயாளர்கள் அவதியுறும் நிலமைகள் தொடர்பிலும் நேரில் பார்வையிட்ட பிரதி அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில் தற்காலிக தீர்வாக சிலவற்றை ஏற்படுத்தித் தருவதாகவும் நிரந்தர தீர்வாக எதிர்காலத்தில் உரியவர்களுடன் கலந்துரையாடி பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்த விஜயத்தின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.திலகநாதன், எம்.ஜெகதீஸ்வரன், வைத்தியர்கள், மற்றும் பிதி அமைச்சரின் இணைப்பாளர்கள் முதலானோர் இணைந்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






