நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை - பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவும் மழை பொழிவு குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது நிலவும் மழைப் பொழிவு காரணமாக வெளியேறுமாறு சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நோர்வூட், பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சீரற்ற காலநிலை
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 49 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், 45 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் ஒரு இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும், பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதாகவும், பிரதேச செயலகப் பிரிவுகளால் வெளியிடப்பட்ட சிவப்பு அறிவிப்புகளில் அபாய நிலை குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள், சுற்றியுள்ள பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், கிராம அலுவலர்கள் உட்பட பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் எந்தவொரு அவசர நிலைக்கும் தயாராக உள்ளனர் என்றும் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு விடுமுறை
மேல் கொத்மலை (Upper Kotmale) மற்றும் விமலசுரேந்திரா (Wimalasurendra) உள்ளிட்ட இரண்டு நீர்த்தேக்கங்களும் மிக விரைவாக நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.

இவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், கொத்மலையில் உள்ள காமினி திசநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 4.26 மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், நீர்மட்டம் உயரும்போது வான்கதவுகள் தானாகவே திறக்கும் என்றும் மழை தொடரும் பட்சத்தில் மண்சரிவு அபாயம் அதிகரிக்கக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை,மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களை அறிவியல் மயப்படுத்துங்கள் அதுவே விடுதலைக்கான வழி 21 நிமிடங்கள் முன்
தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri
குற்றங்கள் நிரூபணமானால்... தாமஸ் மெர்க்கலுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு News Lankasri