யாழில் விற்பனையின்றி தேங்கியுள்ள எரிபொருட்கள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பெட்ரோலுக்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது எரிபொருட்கள் விற்பனையின்றி தேங்கியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கியூ.ஆர் முறைமையில் பெட்ரோல் விநியோகம் மேற்கொள்ளப்படும் நிலையில், பெட்ரோலை அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோலை அனைவரும் தடையின்றி பெறக்கூடிய நிலைமை தோன்றியுள்ளது என்று எரிபொருள் நிரப்பு நிலையத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
எரிபொருள் கொள்வனவில் கட்டுப்பாடுகள்

வாரத்தில் குறிப்பிட்ட அளவு எரிபொருளையே ஒருவர் கொள்வனவு செய்ய முடியும் என்பதால், நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏராளமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல்,டீசல் என்பன விற்பனை செய்ய முடியாமல் தேங்கி இருப்பதால், புதிதாக எரிபொருளை கொண்டுவர முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது வழமையான விற்பனை இலாபம் பாதிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய
உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam