கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை
சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அறிவுறுத்தலுக்கமைவாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் ஆகியோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனான கலந்துரையாடலை அடுத்தே மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குழப்பமான நிலை
மேலும் தெரியவருகையில், இரணைமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநொச்சி நகர் நோக்கி A9 வீதி ஊடாக நகர்ந்தது. இதேவேளை போராட்டத்தை தடுக்க பொலிஸார் வீதித்தடைகளை அமைத்து தடுத்தனர்.
வீதித்தடைகளை தாண்ட பல்கலைக்கழக மாணவர்கள் முற்பட்ட நிலையில் குழப்பமான நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸாரால் போராட்டகாரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றி கைது செய்திருந்தனர்.
மிதுசன், கவிதரன், எழில் ராஜ், அபிஷேக், நிவாசன் ஆகிய ஐந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து போராட்டகாரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஐவரும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
