பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம்!
பல்கலைக்கழக வளாகங்களில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க 24 மணிநேர அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்துவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு முன்மொழிந்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் வன்முறையைத் தடுக்க பல்கலைக்கழக மானியக் குழுவினால் பல பரிந்துரைகளை வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடக்கும் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சம்பவத்தை பார்வையிட்டவர்கள் குறித்த தொலைபேசி எண்ணின் மூலம் புகார்களைப் பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைச் சம்பவங்கள்
அதேவேளை, பல்கலைக்கழகம் மற்றும் விடுதி வளாகங்களுக்குள் உள்ள பொது இடங்களைக் கண்காணிக்க நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகள், சிற்றுண்டிச்சாலைகள், விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் தாழ்வாரங்களில் சிசிடிவி கெமராக்களை நிறுவவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகங்களுக்குள் வன்முறையைத் தடுக்கத் தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) பிறப்பித்த உத்தரவின்படி பல்கலைக்கழக மானியக் குழு இந்த முன்மொழிவுகளை செய்துள்ளது.
குறித்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த தேவையான நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றால் உடல் மற்றும் மூளை காயங்களுக்கு உள்ளான முதலாம் ஆண்டு மாணவன் பசிந்து ஹிருஷான் டி சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவுக்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன்போது, நீதவான்களான ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் அமர்வு இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
