தென்னிலங்கையில் ஆடம்பர வீட்டுக்குள் சிக்கிய மர்மம் : நாயினால் சிக்கிய பெண்
தென்னிலங்கையில் ஆடம்பர வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் மோப்ப நாயான பெர்சியின் காட்டிக்கொடுப்புக்கு அமைய, வீட்டின் கழிவறை நீர்த்தொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஹிக்கடுவை, நலகஸ்தெனிய பகுதியில் உள்ள ஆடம்பரமான இரு மாடி வீடொன்றிலேயே இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனை நடவடிக்கை
வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக காலி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வீட்டினை சோதனையிட்ட போது எந்தவொரு போதைப்பொருளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மோப்ப நாயின் உதவியுடன் மீண்டும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தேடதல் நடவடிக்கை
இதன்போது வீட்டின் மாடி கழிவறையின் நீர்த்தொட்டிக்குள் பொலித்தீனில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 14.8 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 39 வயதான வீட்டு உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam