அமெரிக்கா சென்ற இந்திய குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்
அமெரிக்காவின் டல்லஸ் நகரத்தில், இந்திய குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த கார் மீது ஒரு லொரி மோதியதில் ஏற்பட்ட தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே பெற்றோர்கள் மற்றும் இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில தெரியவருகையில்,
ஐதராபாத் பகுதியில் வசித்து வந்த தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீ வெங்கட் ஆகியோர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளும் விடுமுறை செலவிடுவதற்காக அமெரிக்கா சென்றிருந்தனர்.
தீ விபத்து
அவர்கள் அட்லாண்டாவுக்கு சென்று உறவினர்களை சந்தித்துவிட்டு மீண்டும் டல்லஸுக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், இந்த பயங்கர விபத்து கிரீன் கவுண்டி பகுதியில் நிகழ்ந்துள்ளது.
ஒரு மினி-ட்ரக் எதிரே வந்த அவர்களது காரில் , நேரடியாக மோதியுள்ளது. கார் தீப்பற்றி எரியத் தொடங்கியதும் உள்ளே இருந்த நால்வரும் வெளியே வர முடியாமல், காருக்குள் கருகி உயிரிழந்துள்ளனர்.
கார் முழுவதுமாக சாம்பலாகி விட்ட நிலையில், பொலிஸார் எஞ்சியுள்ள எலும்புக்கூடுகள் மற்றும் உடலின் பாகங்களை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
DNA மாதிரிகள் மூலம் மரணமடைந்தவர்களை உறுதி செய்த பிறகு, உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வம்சாவளியினர்
கடந்த ஆண்டில் இதுபோன்ற மேலும் இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
2024 செப்டம்பர் மாதம், டல்லஸுக்கு அருகே உள்ள அன்னா, டெக்சாஸ் பகுதியில், வேகமாக வந்த லொரி ஒன்று காரை மோதியது.
அந்த காரில் பயணித்த இந்தியர்களான ஆர்யன் ரகுநாத் ஓரம்பட்டி, பாரூக் ஷெய்க், லோகேஷ் பாலசர்லா மற்றும் தர்ஷினி வசுதேவன் ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
2024 ஒகஸ்ட் மாதத்தில், மற்றொரு சம்பவத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியர் மற்றும் அவர்களது மகள், டெக்சாஸில் விபத்தில் உயிரிழந்தனர்.
அந்த விபத்தில், அவர்களின் தீனேஜ் மகன் மட்டுமே உயிர்வாசித்து தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.