பசில் ராஜபக்சவுக்கு என்ன ஆனது..!! பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த ஒரே ஒரு தகவல்..

Basil Rajapaksa Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis Rajapaksa Family
By Benat Jul 15, 2026 09:14 AM GMT
Report

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமே அவர் தொடர்பில் எங்களிடம் தற்போது இருக்கும் ஒரே ஒரு தகவல் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது,  வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாவதற்காக நாட்டுக்குத் திரும்புவாரா என ஜகத் குமாரவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  

பதற்றத்தினால் மூடப்பட்ட வான் பரப்பு : கட்டுநாயக்கவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

பதற்றத்தினால் மூடப்பட்ட வான் பரப்பு : கட்டுநாயக்கவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

நீதிமன்றில் முன்னிலையாவார்..

இந்த கேள்விக்கு பதிலளித்த ஜகத் குமார மேலும் தெரிவிக்கையில், 

பசில் ராஜபக்ச நாட்டுக்குத் திரும்புவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், உரிய நேரத்தில் இந்த விடயங்களில் தலையிடுவார்.

பசில் ராஜபக்சவுக்கு என்ன ஆனது..!! பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த ஒரே ஒரு தகவல்.. | Basil Rajapaksa Absconds

யாரும் நீதிமன்றத்தை தவிர்க்கவும் இல்லை, நீதிமன்றத் நடவடிக்கைகளைத் தவிர்க்க முயற்சிக்கவும் இல்லை. பசில் ராஜபக்ச சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மாத்திரமே எமக்குத் தெரியும். ஆனால், அந்த நோயின் தன்மை குறித்து எனக்குத் தெரியாது.  

பசில் ராஜபக்சவுக்கு என்ன ஆனது..!! பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த ஒரே ஒரு தகவல்.. | Basil Rajapaksa Absconds

அதேபோல, பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மாத்திரமே கட்சிக்கும் தெரியும். அத்துடன் இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என நான் நம்புகின்றேன். நாங்கள் இருக்கும் இடத்திற்கும் அவர் இருக்கும் நாட்டிற்கும் இடையே கணிசமான தூரம் உள்ளது. 

எனவே, அவர் எங்கே இருக்கிறார், என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து எமக்குத் தெரியாது என குறிப்பிட்டுள்ளார். 

 

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி! மிகவும் செலவு குறைவு

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி! மிகவும் செலவு குறைவு

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US