ஓட்டமாவடியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கட்சியின் கலந்துரையாடல்(Photos)
முன்னாள் இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் ஓட்டமாவடி இல்லத்தில் ஐக்கிய மக்கள் கட்சியின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர், முன்னாள் தவிசாளர்களான கே.பி.எஸ்.ஹமீட், ஐ.ரி.அஸ்மி, பிரதித் தவிசாளர் ஏ.ஜி.அமீர், பிரதேச சபை உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.சப்ரி மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஐக்கிய மக்கள் கட்சியின் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பாகக்
கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



