சஜித்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கவுள்ள பிரசார நடவடிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான ஊடகவியலாளர்கள் மற்றும் தேசிய ஊடகங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் ஊடாக தெரியவந்துள்ளது.
சஜித் பிரேமதாசவுக்கு எதிராக உடனடியாக ஒரு பாரிய ஊடகப் பிரசாரத்தை ஆரம்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சஜித்துக்கு ஏதிரான பிரசார திட்டம்
இதற்கமைய கடந்த வாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் ஒரு குழுவினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் எதிர்க்கட்சியின் சில அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத்திலிருந்து கிடைத்துள்ள உத்தரவில் சஜித் பிரேமதாசவை இலக்கு வைத்து ஒரு பாரிய பிரசாரத்தை ஆரம்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

அதற்கு தேசிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விளம்பரம் அல்லது முக்கியத்துவம் வழங்குமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
சமீபத்தில் மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் நடத்தப்பட்ட மாநாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே அக்கட்சியின் உயர்மட்டத்திலிருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri