எயார்பஸ் மோசடியில் மகிந்த ராஜபக்சவுக்கு தப்பிக்க முடியாத சாட்சியங்கள்...
எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் நடைபெற்ற நிதி மோசடியில் 800 மில்லியன் டொலர் பணம் சிங்கப்பூர் வங்கி கணக்கொன்றிலிருந்து நிமல் பெரேரா என்ற நபரின் கணக்கிற்கு வரவு வைக்கப்படும் வரையிலான பாரிய அளவிலான ஊழல் நடைபெற்றுள்ள விதம் தொடர்பில் 2020 பெப்ரவரி 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்களின் போது பெறப்பட்ட இலஞ்சப் பணத்தில் 6 கோடி ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குப் பணமாகக் கையளிக்கப்பட்டதாக இந்த வழக்கின் முதல் சந்தேக நபரான தற்போது மர்மமான முறையில் மரணமடைந்திருக்கக்கூடிய கபில சந்திரசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குத் தெரிவித்திருந்தார்.
2020 நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள்
கபிலவின் மரணத்தின் பின்னர் எயார்பஸ் மோசடி வழக்கில் திருப்பம் ஏற்படும் அல்லது மகிந்த ராஜபக்ச இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று மகிந்தவின் சகபாடிகள் நினைத்திருக்க கூடும்.ஆனால் அதற்கான பல சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

2020 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரத்னஇ பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டே இதனை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிதி மோசடியின் ஒரு பகுதி மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மேற் குறிப்பிட்ட நாடாளுமன்ற விவாதத்தின் போது அஜித் பி. பெரேரா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிதி மோசடியுடன் நாமலும் மகிந்தவும் தொடர்புபட்டிருப்பதாக வாக்குமூலம் அளிக்குமாறு கபில சந்திரசேனவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ராஜபக்ச கும்பல் தெரிவித்திருந்தாலும் அவை பொய்யான பிரசாரங்கள் என இப்போது சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam