ஐக்கிய அரபு இராச்சியம் மீது தொடரும் தாக்குதல்கள்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஏப்ரல் 8 அன்று போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட போதிலும், ஐக்கிய அரபு இராச்சியத்தை (UAE) இலக்கு வைத்து நடத்தப்படும் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, போரின் தொடக்கத்தில் அண்டை நாடுகளைத் தாக்குவதாக ஈரான் அறிவித்திருந்தது.
இதில் ஐக்கிய அரபு இராச்சியம் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளதால், இவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் விரிசலடைந்துள்ளது.
தாக்குதல்
கடந்த வாரம், புஜைரா துறைமுகத்தைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக ஐக்கிய அரபு இராச்சியம் குற்றம் சாட்டியுள்ளது.

புஜைரா பெற்றோலிய தொழில் மண்டலத்தில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இந்தத் தாக்குதலில், மூன்று இந்தியப் பிரஜைகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இதற்கு இராணுவ ரீதியாகப் பதிலடி கொடுப்பது உட்பட அனைத்து உரிமைகளும் தங்களுக்கு இருப்பதாக எச்சரித்துள்ளது.