தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கான சேவை வழங்குநரைத் தெரிவு செய்வதற்கான புதிய ஏலங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை அழைக்கவுள்ளது.
இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் கேள்விப்பத்திர வெற்றியாளரைத் தேர்வு செய்ய முடியும் என்று நம்புவதாக தொழில்நுட்ப அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்திய ஏலதாரர்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம், முன்னதாக ஏலத்தில் செய்யப்பட்ட மெட்ராஸ் செக்யூரிட்டி பிரிண்டர்ஸ் மற்றும் புரோட்டீன் டெக்னாலஜிஸ் ஆகிய இரண்டு இந்திய ஏலதாரர்களை, அரசாங்கம் தகுதி நீக்கம் செய்ததை அடுத்தே புதிய ஏலங்களுக்கான அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
எனவே பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதியில் இது தொடர்பில் விளம்பரம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மெட்ராஸ் செக்யூரிட்டி பிரிண்டர்ஸ் நிறுவனத்தை, இந்த திட்டத்துக்காக தேர்வு செய்ய அரசாங்கத்துக்கு 'வெளிப்புற அழுத்தம் இருப்பதாக இரண்டு உயர்மட்ட அரச அதிகாரிகள் கூறியிருந்தனர்.
எனினும் அந்த நிறுவனம் பல நாடுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அரசாங்கத்திற்கு இந்தியா ஏற்கனவே 450 மில்லியன் இந்திய ரூபாயை முன்பணமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |