கடற்கரையில் கிடந்த சடலம் - அடையாளங்களை வெளியிட்டு பொதுமக்கள் உதவியை நாடிய பொலிஸார்
பமுணுகம - உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(14.06.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பமுணுகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2029-ல் மீண்டும் ராஜபக்சர்கள் ஆட்சி - அதிகாரத்தை பிடிக்க மகிந்தவுடன் இணைந்து அர்ச்சுனா புதிய திட்டம்
சடலம் மீட்பு
உயிரிழந்தவர் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க, 5 அடி 3 அங்குலம் உயரமுடைய ஒரு ஆண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் தனது முடியைக் குட்டையாக வெட்டியுள்ளதுடன், பச்சை நிற டி-ஷர்ட் மற்றும் நீலம், வெள்ளை நிறங்கள் கலந்த சாரம் அணிந்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சடலம் தொடர்பில் பமுணுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.