நோர்மண்டி டி-டே கடற்கரைகளுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்து..
இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜெர்மனியின் படைகளிடம் இருந்து பிரான்ஸை விடுவிப்பதற்காக நேச நாட்டுப் படைகள் தரையிறங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பிரான்ஸின் நோர்மண்டி 'டி-டே' (D-Day) கடற்கரைகளை உலகப் பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ (UNESCO) அறிவித்துள்ளது.
1944-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் திகதி நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலின் நினைவுகளையும், அப்பகுதியின் தனித்துவமான பண்பாட்டு நிலப்பரப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த உலகப் பாரம்பரிய தகுதி வழங்கப்படுவதாக யுனெஸ்கோ தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நோர்மண்டி டி-டே கடற்கரை
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பெல்ஜியம், நோர்வே, போலந்து, கிரீஸ், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,56,115 நேச நாட்டுப் படை வீரர்கள் கடல் வழியாகவும் வான்வழியாகவும் நார்மண்டியின் யூட்டா, ஓமஹா, கோல்ட், ஜூனோ மற்றும் ஸ்வார்ட் ஆகிய கடற்கரை எல்லைகளில் களமிறங்கினர்.

ஐரோப்பாவை நாஜி படைகளின் பிடியில் இருந்து விடுவிப்பதில் தீர்க்கமான திருப்புமுனையாக அமைந்த இந்த நோர்மண்டி கடற்கரைப் பகுதிகள், தற்போதும் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய நினைவு கூரல் நிகழ்வுகளின் மையப்பகுதியாக விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri