உலகக் கிண்ண விதிவிலக்கினால் தண்டனையிலிருந்து தப்பிய லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினா (Argentina) கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, வரவிருக்கும் மேஜர் லீக் சாக்கர் (MLS) ஆல்-ஸ்டார் போட்டியில் பங்கேற்காத போதிலும், எந்தவித இடைநீக்கம் அல்லது ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி தப்பியுள்ளார்.
வழக்கமாக எம்.எல்.எஸ் ஆல்-ஸ்டார் போட்டியில் பங்கேற்கத் தவறினால் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.
உலகக் கிண்ண விதி
ஆனால், 2026-ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பாகவே எம்.எல்.எஸ் நிர்வாகம் மற்றும் வீரர்கள் சங்கம் (MLSPA) இடையே எட்டப்பட்ட சிறப்பு ஒப்பந்தத்தின்படி, உலகக் கிண்ணத் தொடரின் இறுதிச் சுற்றுகள் வரை விளையாடிய வீரர்களுக்குப் போதிய ஓய்வு மற்றும் பயிற்சியில் மீண்டும் இணைவதற்கான அவகாசம் வழங்குவது குறித்து அணிகளுடன் பேசி முடிவெடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சமீபத்தில் முடிவடைந்த உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி வரை அர்ஜென்டினா (Argentina) அணிக்காக விளையாடிய லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது சக வீரர் ரோட்ரிகோ டி போல் ஆகிய இருவருக்கும் சார்லட்டில் நடைபெறவுள்ள 30ஆவது ஆல்-ஸ்டார் போட்டியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு போதிய மருத்துவக் காரணங்களின்றி கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியதற்காக மெஸ்ஸிக்கு ஒரு போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை முன்கூட்டியே முறைப்படி பெறப்பட்ட விலக்கு காரணமாக ஒழுங்கு நடவடிக்கை ஏதும் இன்றி அவர் தப்பியுள்ளார்.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri