இலங்கையில் மீண்டும் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை
இலங்கையில் அண்மைக்காலமாக வேலைவாய்ப்பின்மை மீண்டும் அதிகரித்து வருவதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சனத்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது 0.2 சதவீதமும், இந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 0.3 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 340,240 என மதிப்பிடப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை
இவர்களில் 6.1 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் 2.8 சதவீதம் பேர் ஆண்கள் என சனதொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 15 முதல் 24 வயதுக்குட்பட்டோரிடமே வேலைவாய்ப்பின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் தொழிலாளர் சக்தியும் 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 49.3 சதவீதமாகவும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 49.2 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri