நாட்டின் எரிபொருள் இறக்குமதி செலவில் ஏற்பட்டுள்ள மாற்றம்
2026 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் நாட்டின் எரிபொருள் இறக்குமதிக்காக 4072.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 61.6% அதிகரிப்பாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடப்பட்ட தொகை
குறித்த அறிக்கையில் மேலும், கடந்த 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடப்பட்ட தொகை 2520.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அதற்கமைய, மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில் கணிப்பிடுகையில், இவ்வருடத்தின் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கடந்த ஆண்டை விட 1,551.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.

இதனிடையே, 2026 ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 450.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இது 2025 ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 76.5% அதிகரிப்பாகும். 2025 ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 255.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
சுத்திகரிக்கப்பட்ட கனிம எண்ணெய் இறக்குமதிச் செலவு
அதற்கமைய, மத்திய வங்கி தரவுகளின்படி கணிப்பிடுகையில், 2026 ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 2025 ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 195.4 மில்லியன் அமெரிக்க டொலர்களால் உயர்ந்துள்ளது.
மேலும், 2026 ஓகஸ்ட் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட கனிம எண்ணெய் இறக்குமதிக்காக 321.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் அதற்காக 202.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தன. அதற்கமைய, சுத்திகரிக்கப்பட்ட கனிம எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆண்டு அடிப்படையில் 58.7% ஆல் அதிகரித்துள்ளது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan