அரச ஊழியர்களின் சம்பளத்தை மறைமுகமாகப் பறித்துக் கொண்ட அரசாங்கம்!
மக்களின் வயிற்றில் அடித்த எந்தவொரு அரசாங்கமும் மக்களால் தொடர்ந்து ஆட்சியில் இருக்க அனுமதிக்கப்பட்டதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கியதை நான் வரவேற்றேன். சம்பளத்தை அதிகரித்தது நல்ல விடயம் என்றே கூறினேன்.
அரசாங்கத்தின் நடவடிக்கை நியாயமானதா
ஆனால், சம்பளத்தை அதிகரித்துவிட்டு அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, சம்பளத்துடன் வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாயையும் மறைமுறைகமாகப் பறித்துக் கொள்வது நியாயமானதா.
சம்பள அதிகரிப்புக்கு முன்னர் மக்கள் தமது வாழ்க்கையை நடத்துவதற்காக வாங்கிய அத்தியாவசியப் பொருட்களின்விலைகள் அனைத்தும் உயர்ந்திருந்தால், அவர்கள் அதைவிட அதிகமான பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.
எரிபொருள் விலை தொடர்பில் பேசும்போது, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரே, ஒரு லீட்டர் எரிபொருளை இலங்கைக்குக் கொண்டுவரும் போது அரசாங்கம் விதிக்கும் வரி குறித்து தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் திறைசேரியில் அவ்வளவு பணம் இருக்கின்றது என்றால், எதற்காக எரிபொருளுககு வரி விதிக்க வேண்டும். திறைசேரியில் அதிகளவு பணம் இருப்பதாக கூறுகின்றார்கள்.
ஆனால், மக்கள் எதிர்பார்த்தது இதுவல்ல. மக்கள் கேட்டது தங்களால் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தித் தருமாறுதான். நான் 30 வருடங்களாக நாடாளுமன்றத்தில் இருக்கின்றேன்.
மக்களின் வயிற்றில் அடித்த எந்தவொரு அரசாங்கமும் மக்களால் தொடர்ந்து ஆட்சியில் இருக்க அனுமதிக்கப்பட்டதில்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு ஆட்சியைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது. மக்களின் பசியை உணர வேண்டும். பசியால் வயிறு எரியும்போது ஏற்படும் வேதனை மிகவும் கொடுமையானது என குறிப்பிட்டுள்ளார்.
வலுவான வெளிநாட்டு முதலீட்டு வரவு: சரிந்துவரும் உலகளாவிய எண்ணெய் விலை - ஆசியாவில் பலமடையும் இந்திய ரூபாய்
பாக்ஸ் ஆபிஸ்: சூர்யாவின் சீன் படம் வெளிவந்த 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ளா வசூல்... Cineulagam