திடீரென சுற்றிவளைக்கப்பட்ட பிரபல விடுதி! மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்
மொனராகலை - தனமல்வில மற்றும் வெல்லவாய, கித்துல்கோட்டை பகுதியில் விடுதியில் கஞ்சா வைத்திருந்ததற்காக இன்று காலை (04) ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த விடுதியை சுகாதாரமற்ற முறையில் நடத்தியதற்காக மூன்று சந்தேகநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
விதிக்கப்பட்டுள்ள அபராதம்
சுகாதாரமற்ற முறையில் நடத்தப்பட்டு வந்த அந்த விடுதி, தனமல்வில பொலிஸ் அதிகாரிகளால் அவசரகால ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் உணவு கெட்டுப்போயிருந்ததாகவும், குடிப்பதற்கு வழங்கப்பட்ட தண்ணீர் மிகவும் அசுத்தமாக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கும் இந்த விடுதி, சுகாதாரமற்ற முறையில் இயங்கியதற்காக இதற்கு முன்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan