மட்டக்களப்பில் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 16ஆவது நாளாகவும் இன்றையதினம் (17.07.2024) மட்டக்களப்பு நகரில் தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது தொழில் உரிமையினை உறுதிப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினால் இந்த போராட்டம் தொடர்ச்சியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது, 'வயது ஏறுகிறது வாழ்க்கை போகுது வேலைவேண்டும்', 'நாம்கண்ட கனவு பொய்யாகிவிடுமோ', 'பட்டம் வீட்டில் நாங்கள் றோட்டில்' போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியான புறக்கணிப்பு
தமது போராட்டம் 16ஆவது நாளை கடந்துள்ளபோதிலும் இதுவரையில் தமக்கு சாதகமான எந்த பதிலும் வழங்கப்படாத நிலையில், தாங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
