மிதிகம ருவனின் நெருங்கிய சகா ஆயுதங்களுடன் கைது
தென்னிலங்கையின் பாதாள உலகக்கும்பல் தலைவர்களில் ஒருவரான மிதிகம ருவனின் சகா ஒருவர் மூன்று துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை மாவட்டத்தின் மிதிகம மற்றும் வெலிகம பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படை நடத்திய சோதனையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் பேரில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து மூன்று டீ-56 ரக துப்பாக்கிகள், அதற்கான தோட்டாக்கள் மற்றும் தோட்டா உறைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தற்போதைக்கு பூசா அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மிதிகம ருவனின் நெருங்கிய உறவினரும் முக்கிய சகாக்களில் ஒருவருமாவார் என்று தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



