குருநாகல் மெல்சிறிபுர கேபிள் கார் விபத்து : வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள்
குருநாகல் மெல்சிறிபுர நாவுயன பிக்குகள் தியான நிலையத்தில் நேற்றுமுன்தினம்(24.09.2025) நடந்த கேபிள் கார் விபத்தில் இதுவரை ஒன்பது பிக்குகள் மரணமடைந்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் குருநாகல் பகுதியிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரமடைந்தவர்களில் மூவர் வெளிநாட்டை சேர்ந்தவர்களாவர்.ரஷ்யா மற்றும் ருமேனியா, இந்திய பிக்குகள் ஆவர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், நாவுயன பிக்குகள் தியான நிலையத்தில் மலைப் பகுதியில் இருக்கும் தியான நிலையத்திற்கு 13 பிக்குகள் குறித்த கேபில் காரில் பயணித்துள்ளனர்.
9 பேர் மரணம்
தியான இடத்தை அண்மித்த 10 அடி இருக்கும் தருவாயில் கேபிள் அறுந்துள்ளது. அச்சந்தர்ப்பத்தில் கேபிள் காரில் இருந்து இரு பிக்குகள் பாய்ந்துள்ளனர்.அவர்களுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
சிலரின் கை,கால்கள் உடைந்துள்ளதாக வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிக்குமார்களின் உடலங்கள் 150 மீட்டருக்கு மேல் வீசப்பட்டு கிடந்தாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது அதாவது நேற்றுமுன்தினம் ஏழு பேர் கொல்லப்பட்டதோடு நேற்று இரண்டு பிக்குகள் மரணமடைந்துள்ளனர்.
கேபிள் காரில் 500 கிலோ கிராமே அதி கூடிய பாரம்
நாவுயன பிக்குகள் தியான நிலையம் 5000 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. அது 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.200 பிக்குகள் வசிப்பதுடன் 250 க்கும் மேற்பட்ட தியான நிலையங்கள் அதாவது குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன்.
நேற்று முன்தினம்தினம்(24) இரவு தியானத்தில் ஈடுபடுவதற்காக 13 பிக்குகள் மலைப் பகுதிக்கு கேபிள் காரில் சென்றுள்ளனர். கேபிள் கார் பயணிக்கும் தண்டவாளம் 20 வருடங்கள் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு குறித்த கேபிள் தினமும் பரிசோதனை செய்யப்படுவதாகவும் நிலையத்திலுள்ள பிக்குகள் தெரிவிக்கின்றனர்.
கேபிள் காரில் 500 கிலோ கிராமே அதி கூடிய பாரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.13 பிக்குகள் என்னும் போது இரு மடங்கு பாரம் ஏற்றப்பட்டுள்ளது.கூடிய பாரமே கேபிள் அறுந்து போவதற்கான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



