19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகள்: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள்
துபாயில் (Dubai) நடைபெறும் ஆசிய கிண்ணத்துக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கு இடையிலான இரண்டு, ஒருநாள் அரையிறுதி போட்டிகளில் நேற்று பங்களாதேஸ் அணி, பாகிஸ்தானிய அணியையும், இந்திய அணி, இலங்கை அணியையும் தோற்கடித்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
ஆசிய கிண்ணத்துக்கான இந்த தொடரில் இந்த நான்கு அணிகளை தவிர பிரித்தானிய, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்தநிலையில், நேற்று இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் பங்களாதேஸ் அணி 7 விக்கெட்டுக்களால் பாகிஸ்தானை வெற்றி கொண்டது.
இந்து சமுத்திர மூலோபாய இருப்பிடம்: இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பு மேம்பாடு குறித்து கலந்துரையாடல்
அரையிறுதி போட்டி
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி, 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஸ் அணி, 22.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
அதேநேரம், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு அரையிறுதியில் இலங்கை 46.2 ஓவர்களில் 173 ஓட்டங்களை பெற்றது. இதில், லக்வின் அபேசிங்க 69 ஓட்டங்களையும், சாருஜன் சண்முகநாதன் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதனையடுத்து துடுப்பாடிய இந்திய அணி, 21.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது. இதில், 13 வயதான வைபாவ் சூரியவான்சி 67 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில், இந்திய அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான, ஆசியக்கிண்ண 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இறுதிப்போட்டி, நாளை மறுதினம், 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |