இலங்கைக்கு வர முடியாது என சிங்கப்பூரில் இருந்து அறிவித்துள்ள ஷிரந்தி
இலங்கைக்கு வர முடியவில்லை என சிங்கப்பூரில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரிலிய சவிய கணக்கு தொடர்பான விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் பெறுவதற்காக ஷிரந்தி ராஜபக்சவை நேற்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும், அவர் அங்கு சமூகமளிக்கவில்லை என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கண் அறுவை சிகிச்சை
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் முன்னிலையாக முடியாது என ஷிரந்தி தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவலை ஷிரந்தி ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஒருவர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்திற்கமைய, அவர் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளதால், அவரால் தற்போது விசாரணையில் கலந்துகொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதியன்று ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
இதன்போது விமான நிலையத்தில் வைத்து நிதி மோசடிப் பிரிவில் முன்னிலையாகுமாறு அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam