புதிய சட்டமூலத்துக்கு ஐ.நா. கடும் எதிர்ப்பு - அவசரமாக நிறைவேற்ற வேண்டாம் என்றும் எச்சரிக்கை

United Nations Parliament of Sri Lanka Sri Lanka Government NPP Government
By Rakesh Oct 30, 2026 06:02 AM GMT
Report

அரசால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திலும் உள்வாங்கப்பட்டிருப்பது குறித்துத் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னர் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி, பரந்துபட்ட மீளாய்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. 

"அரசால் சமர்ப்பிக்கப்பட்ட முன்னைய வரைவுடன் ஒப்பிடுகையில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

சட்ட நியமங்களுக்கு உட்பட்டதாக

இருப்பினும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதனைப் பதிலீடு செய்வதற்காக முன்னர் முன்மொழியப்பட்ட ஏனைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களில் காணப்பட்ட பல குறைபாடுகள் இந்தச் சட்டமூலத்திலும் உள்ளடங்குவது தீவிர கரிசனைக்குரிய விடயமாகும்.

புதிய சட்டமூலத்துக்கு ஐ.நா. கடும் எதிர்ப்பு - அவசரமாக நிறைவேற்ற வேண்டாம் என்றும் எச்சரிக்கை | Un Strongly Opposes New Bill Sri Lanka

குறிப்பாக, பயங்கரவாதக் குற்றங்கள் எனும் பதம் பரந்துபட்ட அடிப்படையிலும் போதிய தெளிவின்றியும் வரையறுக்கப்பட்டிருத்தல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் ஏனைய சிவில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையிலான மட்டுப்பாடுகள், நிர்வாகத் தடுப்புக்காவல், போதிய நீதித்துறை மேற்பார்வையின்மை, கைது செய்வதற்கும் சோதனைகளை நடத்துவதற்குமான பரந்துபட்ட அதிகாரங்கள், நிறைவேற்று அதிகாரத்தின் வசம் மட்டுமீறிய தன்னிச்சையான அதிகாரங்கள், சித்திரவதைகள் மற்றும் மிக மோசமாக நடத்தப்படுவதிலிருந்து போதிய பாதுகாப்பின்மை, நியாயமான விசாரணைகள் மற்றும் தீர்வுகள் என்பன ஆழமான கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன.

பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் சட்டபூர்வ நியமங்களுக்கு உட்பட்ட விதத்திலும், தெளிவானதும் குறுகியதுமான வகையிலும் வரையறுக்கப்பட வேண்டும்.

அதேபோன்று, எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், சங்கம் அமைத்தல், மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம், பொது நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் போதிய பாதுகாப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

அத்தோடு, எந்தவொரு கட்டுப்பாடும் சட்ட நியமங்களுக்கு உட்பட்டதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.

நீதிமன்ற அனுமதியைக் கட்டாயமாக்க

அடுத்ததாக, நீதிமன்ற அனுமதியின்றி கைது, சோதனையிடல், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முப்படையினர் மற்றும் கரையோரக் காவல்படையினருக்குப் பரந்துபட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில், இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் இதுபற்றிச் சிவில் சமூக அமைப்புகள், சுயாதீன கட்டமைப்புகள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட பரந்துபட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, மீளாய்வொன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை ஊக்குவிக்கின்றோம்.

புதிய சட்டமூலத்துக்கு ஐ.நா. கடும் எதிர்ப்பு - அவசரமாக நிறைவேற்ற வேண்டாம் என்றும் எச்சரிக்கை | Un Strongly Opposes New Bill Sri Lanka

அத்தோடு, பயங்கரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களுக்கான வரையறையைக் குறுகியதாகவும் தெளிவாகவும் வரையறுத்தல், கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பில் சுயாதீன நீதிமன்ற மேற்பார்வையை உறுதி செய்தல், சித்திரவதைகள், முறையற்ற விதத்தில் நடத்தப்படல், வலிந்து காணாமல் ஆக்கப்படல் என்பவற்றுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்தல், முறையான சட்ட நடவடிக்கை மற்றும் நியாயமான விசாரணை என்பவற்றுக்கான உத்தரவாதத்தை வலுப்படுத்தல், சோதனையிடல் மற்றும் பறிமுதல் செய்தல் என்பவற்றுக்கு நீதிமன்ற அனுமதியைக் கட்டாயமாக்குதல், சிவில் சேவையில் பொலிஸாரே பிரதானம் என்பதை உறுதிப்படுத்தல் ஆகிய பரிந்துரைகளையும் முன்வைக்கின்றோம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம் - தாயை காப்பாற்ற போராடிய மகளுக்கு நேர்ந்த துயரம்

கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் நடந்த கொடூரம் - தாயை காப்பாற்ற போராடிய மகளுக்கு நேர்ந்த துயரம்

நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US