நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனையை நிறைவேற்றிய அமெரிக்கா: ஐ. நா கடும் கண்டனம்
அமெரிக்கவின், அலபாமா மாநிலத்தில் நைட்ரஜன் வாயுவை கொண்டு கைதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருப்பதை ஐ. நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கண்டித்துள்ளார்.
மேலும், இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது கொடுமைப் படுத்துவதற்கு சமம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தண்டனைக்கு உள்ளான கெனத் ஸ்மித் என்பவர் 1988ஆம் ஆண்டு கூலிப் பணத்துக்காக கொலை செய்தார் என அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
மரண தண்டனை
இதற்கமைய குறித்த நபருக்கு நைட்ரஜன் வாயுவைக் கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தண்டனை தொடர்பில் கருத்துரைத்த ஐ. நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்கர் டர்க்,
“நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து கடும் கவலை தெரிவிக்கப்படும் வேளையில், கெனத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு அந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது.
இந்த முறை இதற்கு முன் சோதித்துப் பார்க்காத ஒன்று. இவ்வாறு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது கொடுமைப்படுத்துவதற்கு ஈடாகலாம்,” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
