சுமந்திரன் - சிறீதரன் வழங்கிய அதி முக்கிய உத்தரவாதம்
தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களான சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் “கிழக்கு மாகாணத்திற்கே செயலாளர் பதவி” என உறுதியளித்ததாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் தவராஜா சர்ஜீன் தெரிவித்தார்.
மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கிழக்கு மாகாணத்திற்குதான், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குதான் வழங்கப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுச் செயலாளர் பதவிக்கும் மும்முனைப் போட்டி வந்து தேர்தல் ஒன்று நடத்தப்படும் நிலை ஏற்படுமேயானால் அதற்கு பின்னணியில் இருந்து செயற்படும் ஒருவர் தான் காரணமாக இருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசனின் பெயரை முன்மொழிந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமையும், அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கருத்து வெளியிட்டிருந்தமையும் பரவலாக பேசப்பட்டது.
இந்தநிலையில், பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் சாணக்கியன் உள்ளிட்டோருக்கு நாம் தொலைபேசி அழைப்பெடுத்து தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடினோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |