முல்லைத்தீவு மனித புதைகுழி தொடர்பில் ஐநாவின் முக்கிய பதில்(Video)
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கான உதவிகளை ஐக்கியநாடுகள் சபை செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் அறிக்கைக் ஒன்று வெளியிடப்பட்டது.
குறித்த அறிக்கையில் இதுவரை இலங்கையில் 32 மனித புதைகுழிகள் இருந்ததாகவும், கொக்குதொடுவாய் புதைகுழியானது 33வது மனித புதைகுழி என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்மூலம் இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பில் சர்வதேச ஆதரவை நாம் திரட்டவில்லை என்பது வெளிப்படுத்தப்படுகிறது.
மேலும், கொக்குதொடுவாய் மனித புதைக்குழி தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலான கடிதமொன்றை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பியிருந்தோம்.
இதற்கு ஐ.நா மனித உரிமை பேரவையானது மனித புதைக்குழி விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்கான உதவிகளை மேற்கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
