பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் எதுவும் இல்லை: சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு

United Nations Anura Kumara Dissanayaka Shanakiyan Rasamanickam Government Of Sri Lanka
By Rakesh Feb 28, 2025 11:38 AM GMT
Report

பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் இந்தமுறையும் சாதகமான தீர்வினையோ அல்லது புதிய முன்மொழிவுகளையோ முன்வைக்கவில்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

அத்தோடு, பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த அரசும் கடந்த காலங்களைப் போன்றே செயற்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கு புதிய அரசமைப்பு அவசியம் : மனோ எம்.பி சுட்டிக்காட்டு

இனப்பிரச்சினை தீர்வுக்கு புதிய அரசமைப்பு அவசியம் : மனோ எம்.பி சுட்டிக்காட்டு

புதிய அரசின் முன்மொழிவுகள்

அவர் மேலும் உரையாற்றுகையில், "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் தற்போது நடைபெறுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவுக்குச் சென்று பல விடயங்களைக் கூறியுள்ளார். ஆனால், பொறுப்புக்கூறல் விடயத்தில் கடந்த காலங்களில் செய்த விடயங்களை விட புதிய அரசின் புதிய முன்மொழிவுகள் எதனையும் கூறவில்லை.

பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் எதுவும் இல்லை: சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு | Un Government Of Sl Human Rights Council

வடக்கு, கிழக்கு மக்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் மிகவும் கரிசனையுடன் உள்ளனர். கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எமது மக்களைக் கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம்.

ஆனால், கடந்த காலங்களில் அரசுகள் செய்ததைப் போன்றே தற்போதைய அரசும் செயற்படுகின்றது என்பது தெளிவாக விளங்குகின்றது.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் உள்ளிட்ட பொறிமுறைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தற்போது கூறியிருந்தாலும் இவை அனைத்தும் தமிழ் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நிராகரித்த பொறிமுறைகளாகும்.

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பொறுப்புக்கூறல்

இதேவேளை, வடக்கு மக்கள் வாக்கு வழங்கியுள்ளனர். உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசமைப்பு பற்றி தெளிவாகக் கூறியுள்ளீர்கள். ஆனால், அது தொடர்பில் இன்று வரையில் ஒரு வார்த்தையேனும் கூறவில்லை.

பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் எதுவும் இல்லை: சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு | Un Government Of Sl Human Rights Council

எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை புதிய அரசமைப்பில் நிரந்தரப் பெயராக உள்ளடக்கவுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

அமைச்சர் சந்திரசேகரிடம் ஒன்றைக் கேட்கின்றேன். வடக்கு மக்கள் புதிய அரசமைப்பில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கின்றனர். அது பற்றி நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள். அதிகாரப் பகிர்வை விடுவோம். ஆனால், புதிய அரசமைப்பு வருமா? வராதா? வந்தால் அதில் உள்ளடக்கம் என்ன? பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான ஒதுக்கீடுகளும் இன்றைய விவாதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையில் பொறுப்புக்கூறல் என்பது மிகவும் பிரதானமான விடயமாகும்.

ஆனால், வெளிவிவகார அமைச்சர் எந்தச் சாதகமான பதிலையும் வழங்கவில்லை. இதற்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பதிலளிப்பார்கள் என்றார்.

மக்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகள்: கஜேந்திரகுமார் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

மக்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகள்: கஜேந்திரகுமார் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US