இம்ரான்கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு ஐ.நா விடுத்த கோரிக்கை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானை(Imran Khan) உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் வைக்கப்பட்டுள்ள இவரின் தடுப்புக் காவல் தன்னிச்சையானது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது.
தன்னிச்சையான தடுப்புக்காவல்
எனவே அவரை உடனடியாக விடுதலை செய்து இழப்பீடு வழங்கவேண்டும் என தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஏப்ரல் 2022இல் இம்ரான்கான் வெளியேற்றப்பட்டதிலிருந்து அவருக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகள் குறித்து ஐ.நா. குழு தீவிர கவலைகளை எழுப்பி வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் குழுவின் இந்தக் கோரிக்கைக்கு பாகிஸ்தானின் அரசு, இது உள்நாட்டு விவகாரம் என பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri