இலங்கையின் சமூக மற்றும் அரசியல் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் திட்டங்கள்! பாராட்டிய ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம்
ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் உதவி நிர்வாகியும், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா இலங்கையின் சமூக மற்றும் அரசியல் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களைப் பாராட்டியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை, பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை மீண்டும் சரியான திசையில் நகர்கிறது என்று கூறிய விக்னராஜா, இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்தினார்.
நிலையான அபிவிருத்தி
இலங்கையில் நிலையான அபிவிருத்தி இலக்குகள், பசுமைப் பொருளாதாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை அடைவதற்கு தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்த கலந்துரையாடலின் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்,
நீண்டகால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள
வேலைத்திட்டங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து
பிரதமர் குணவர்தன விக்னராஜாவிடம் விளக்கமளித்துள்ளார்