உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினரால் கடுமையாக தாக்கப்பட்ட ரஷ்ய பிரதிநிதி (Video)
உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறித்த ரஷ்ய பிரதிநிதி, முகத்தில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் சர்வதேச மாநாட்டில் பெரும் சலசலப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
நேற்றைய தினம் (04.05.2023) துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறும் கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61ஆவது சர்வதேச மாநாட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில் ரஷ்யா, உக்ரைன் மட்டுமின்றி அல்பேனியா, அர்மேனியா, அஜர்பஜைன் உள்பட உறுப்பு நாடுகள் பங்கேற்றுள்ளன.
சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கை தனது நாட்டுக் கொடியைக் கையில் வைத்திருந்தார்.
மோதலை தடுத்து அதிகாரிகள்
இதனைப் பார்த்த ரஷ்ய பிரதிநிதி உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் கையில் வைத்திருந்த தேசியக் கொடியைப் பறித்துக் கொண்டு, அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார்.
பின் ரஷ்ய பிரதிநிதியைத் துரத்திச் சென்ற உக்ரைன் எம்பி அவர் கையில் வைத்திருந்த உக்ரைன் கொடியை மீண்டும் பறித்துக் கொண்டுள்ளார்.
மேலும் ரஷ்ய பிரதிநிதி செயலுக்கு உடனடியாக தக்க பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் அவரது முகத்தில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இருவரிடையே ஏற்பட்ட மோதலை அங்கிருந்த மற்ற அதிகாரிகள் தலையிட்டுத் தடுத்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
? In Ankara ??, during the events of the Parliamentary Assembly of the Black Sea Economic Community, the representative of Russia ?? tore the flag of Ukraine ?? from the hands of a ?? Member of Parliament.
— Jason Jay Smart (@officejjsmart) May 4, 2023
The ?? MP then punched the Russian in the face. pic.twitter.com/zUM8oK4IyN