உலகை உலுக்கிய துருக்கி பூகம்பம்! சேதவிபரங்களை முதன்முதலில் வெளியிட்ட உலக வங்கி
துருக்கி நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
துருக்கிக்கான உலக வங்கியின் இயக்குநர் ஹம்பர்டோ லோபஸ் இதனை கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி 6 துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளது.
நிலநடுக்க பாதிப்பு
இதற்கமைய, இந்த இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ தாண்டியுள்ளதுடன், நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இதனை சீரமைக்க 2 மடங்கு கூடுதலாக செலவாகும் எனவும் 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 2023 இல் 3.5% முதல் 4% வரை குறைக்கும் என்று வங்கி மதிப்பிட்டுள்ளது
இதற்கமைய, பின்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலைமை உண்மையிலேயே கவலை அளிப்பதாக உலக வங்கி குழுமம் மற்றும் மத்திய ஆசியாவின் துணைத் தலைவர் அன்னா பிஜெர்டே கூறியுள்ளார்.