ஜேர்மனியிடம் உக்ரைன் விடுத்துள்ள கோரிக்கை!
உக்ரைன் தொடர்ந்து பல நாடுகளிடம் ஆயுத உதவி கோரி வருகிறது.
இந்நிலையில், 500 கிமீ (310 மைல்) தூரம் வரை செல்லக்கூடிய டாரஸ் குரூஸ் ஏவுகணைகளை தங்களுக்கு வழங்குமாறு உக்ரைன் ஜேர்மனியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுடைய கோரிக்கையை ஜேர்மனி ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வி ரஷ்யா உக்ரைன் யுத்தத்தில் முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.
500 கிலோமீற்றர் தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணைகள்
உக்ரைன் கோரியுள்ள ஏவுகணைகள் 500 கிலோமீற்றர் தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடியவை.
உக்ரைன் இந்த வகையான ஆயுதங்களை பல மாதங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது, ஆனால் மேற்கத்திய நட்பு நாடுகளின் ஆதரவு குறுகிய தூர ஆயுதங்களில் கவனம் செலுத்துகிறது.
அதாவது, உக்ரைனிலிருந்து இந்த ஏவுகணைகளை ஏவினால், அவை ரஷ்யாவுக்குள்ளேயே சென்று தாக்கமுடியும். ஆனால், அமெரிக்கா உட்பட, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் மேற்கத்திய நாடுகள் அனைத்தும், தாங்கள் உக்ரைனுக்கு வழங்கும் ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் ரஷ்யாவுக்குள் சென்று தாக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளன.
ஏவுகணைகளை ஜேர்மனி வழங்குமா
இவ்வாறு, ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடக்கும் பட்சத்தில், போர் இன்னும் தீவிரமடைந்து விடும் என குறித்த நாடுகள் எண்ணுகின்றன.
ஆகவே, உக்ரைன் கேட்டுள்ள ஏவுகணைகளை ஜேர்மனி வழங்குமா என்ற கேள்வி தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.
மேலும் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பெர்லினில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இக்கோரிக்கை தொடர்பான மேலதிக விவரங்களை வழங்கவோ அல்லது ஜேர்மனி உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கூறவோ மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |