ரஷ்யாவின் பாரிய எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் (Russia) தெற்மேற்கில் உள்ள ரோஸ்டவ் மாகாணத்தில் உள்ள பகுதியில் உக்ரைன் (Ukraine) ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது இன்று(13.07.2024) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரிய தீப்பரவல்
இதன்போது ஏற்பட்ட தீ சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 2100 சதுர அடி அளவிற்கு தீ பரந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த தீ விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும், இரண்டு ட்ரோன்கள் பறந்து வந்த நிலையில் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு செயன்முறை அவற்றை இடைமறித்து அழித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் ஐந்து ட்ரோன்களில் நான்கு ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு செயன்முறை இடைமறித்து அழித்துள்ளதோடு, ஒரு விமானம் பெலாரஸ் திசையில் உக்ரைன் வான்வெளியை விட்டு வெளியேறியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |