சட்டவிரோத திருமண குற்றச்சாட்டில் இருந்து இம்ரான் கான் விடுதலை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி பீபி ஷஹிபா ஆகியோரை சட்டவிரோத திருமணம் குற்றச்சாட்டில் இருந்து, நீதிமன்றம் இன்று(13) விடுவித்துள்ளது.
இதனையடுத்து இம்ரான் கான் மற்றும் பீபி சாஹிபா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்" என்று கானின் சட்டத்தரணி நயீம் பஞ்சுதா எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட பின்னர், 71 வயதான இம்ரான் கானை தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்க, அவருக்கு எதிராக வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
சிறைத்தண்டனை விதிப்பு
முந்தைய திருமணத்திலிருந்து பீபியின் விவாகரத்துக்கும், இம்ரான் கானுடனான அவரது திருமணத்திற்கும் இடையே தேவையான இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறியதன் மூலம், இஸ்லாமிய சட்டத்தை மீறியதாக கூறி, கடந்த பெப்ரவரியில் தம்பதியருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று வெளியான தீர்ப்பை தொடர்ந்து சிறையில் உள்ள கான் மற்றும் பீபி இருவரும் விடுவிக்கப்படுவார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற தேசியத் தேர்தலுக்கு முன்னதாக கான் பெற்ற நான்கு சிறைத் தண்டனைகளும் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |